Partners for Planning - ஊனமுற்றோர் வரிச் சலுகை - Tamil
YES!
Send me updates on new resources!
YES!
Send me updates on new resources!

ஊனமுற்றோர் வரிச் சலுகை (DTC) என்பது திருப்பிச்-செலுத்த முடியாத வரிச் சலுகை ஆகும். ஒரு ஊனமுற்றவருக்கோ, அல்லது அவருக்கு ஆதரவளிப்பவருக்கோ அவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியைக் குறைப்பதன் மூலமாக மக்களுக்கு இது உதவுகிறது.  இதர மதிப்புமிக்க சலுகைகளுக்கும் திட்டங்களுக்கும் DTC அதன் கதவுகளைத் திறக்கிறது. 

வயது வரம்புத் தேவை என்று எதுவும் இல்லை.ஒரு கடுமையான, நீடித்த ஊனம் அவர்களுக்கு இருந்தால் குழந்தைகள், வயது வந்தோர் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைவரும் இதற்குத் தகுதி பெறுவார்கள். 



தகுதி:

தகுதி பெறுவதற்கு ஒரு நபர் பின்வரும் மூன்று அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • உடல்ரீதியான அல்லது மனரீதியான செயல்பாடுகளில் ஒரு கடுமையான குறைபாடு இருக்க வேண்டும்.

  • இந்த குறைபாடு நீடித்ததாக இருக்க வேண்டும், அதாவது, இது குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு நீடித்திருக்க வேண்டும் அல்லது நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இருக்க வேண்டும்.

  • 90% சமயத்தில் இது கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.

தகுதி என்பது மருத்துவ நிலையை மட்டுமே அடிப்படையாகக்

கொண்டதாக இருக்காது, ஆனால் ஒரு நபர் மீதும், அன்றாட வாழ்வின்

நடவடிக்கைகள் மீதும் அந்த குறைபாடு ஏற்படுத்தும்

பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும். 

இதற்கு விண்ணப்பிக்க நீங்கள் கனடா வருவாய் நிறுவனத்தின் (CRA) T2201 படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் - இந்த படிவம் இரண்டு பகுதிகளைக் கொண்டது:

  • பகுதி A தனிநபர் அல்லது ஒரு பிரதிநிதி மூலமாக பூர்த்தி செய்யப்படுகிறது

  • பகுதி B மருத்துவ வல்லுனர் மூலமாக பூர்த்தி செய்யப்படுகிறது  T2201 படிவத்தை இங்கே பெறுங்கள்

T2201 படிவத்தின் இந்த பகுதியை பூர்த்தி செய்யும் பல்வேறு மருத்துவ வல்லுனர்கள் உள்ளனர்.  இங்கே கிளிக் செய்து ஒரு முழுமையான பட்டியலைப் பெறுங்கள்.

பிசி உனமுற்றோருக்கான கூட்டணி ஒரு கருவியை உருவாக்கியுள்ளது இது TT2201-ஐ பூர்த்தி செய்ய உங்களுக்கும் உங்கள் மருத்துவ வல்லுனருக்கும் உதவும்.  இந்த கருவியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள் இங்கே


விண்ணப்பித்த பிறகு:

நீங்கள் CRA விற்கு உங்களது பூர்த்தி செய்யப்பட்ட T2201 படிவத்தை சமர்ப்பித்த பின்னர் அவர்கள் உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்வார்கள்.   சமர்ப்பித்த சமயம் முதல் சராசரியாக எட்டு வாரங்களுக்குள் அவர்களிடம் இருந்து பதிலை நீங்கள் எதிர்பார்க்கலாம்.  நீங்கள் CRA செயலாக்க காலத்தை இங்கே சரிபார்க்க முடியும்.

CRA-க்கு பின்-தொடர் கேள்விகள் இருக்கலாம் மேலும் தெளிவுபடுத்தும்படி உங்கள் மருத்துவ வல்லுனருக்கு நேரடியாக ஒரு கடிதத்தை அனுப்பலாம். 

உங்களது தகுதியைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த CRA உங்களுக்கு ஒரு தீர்மான அறிவிப்பை அனுப்புவார்கள்.

உங்கள் விண்ணப்பம் மறுக்கப்பட்டால், ஒரு மேல் முறையீட்டைச் சமர்ப்பிக்க உங்களுக்கு 90 நாட்கள் காலம் இருக்கும்.  நீங்கள் ஒரு எதிர்ப்பு அறிவிப்பைப் பதிவு செய்ய வேண்டும், அதில் CRA ஏன் அவர்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கு நீங்கள் நம்பும் உண்மைகள் மற்றும் காரணங்களைக் கொண்டிருக்கும்.

தயவுசெய்து கவனிக்கவும், எல்லா சொற்களும் ஆங்கிலத்தில் இருந்து சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்காது. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க பக்கத்தைப் பார்வையிடவும். இங்கே கிளிக் செய்யவும்